Home / TECHNO NEWS / விரைவில் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம்

விரைவில் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம்

நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹானர், அசுஸ், சியோமி, ரேசர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கேமிங் ஸ்மார்ட்போனினை இதுவரை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் நோக்கியாவும் இணையும் என தெரியவருகிறது

நோக்கியா வகையை கைப்பற்றிய H .M .D . குளோபல் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கேமிங் அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கென சிறிய வீடியோ ஒன்றை நோக்கியா மொபைல் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும் ட்விட் உடன் #GameOn என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்தது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *