Home / FOREIGN NEWS / பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை

பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை

உந்துருளியில் வந்தவர்கள் €200,000 மதிப்புள்ள இந்த நகையினை கொள்ளையிட்டுள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள place Saint-Placide பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், கண்ணாடி பெட்டிகளை ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி உடைத்து, அங்கிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *