Home / FOREIGN NEWS / ரஷியாவின் முடிவால் இஸ்ரேல் அதிர்ச்சி

ரஷியாவின் முடிவால் இஸ்ரேல் அதிர்ச்சி

சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷிய முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஷியா கைவிட்டதை நினைவு கூற வேண்டும்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை நேற்று தொடர்புகொண்டு பேசிய ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ‘ சிரியாவிற்கு எஸ்-300 ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சிரியாவில் உள்ள ரஷிய ரணுவ வீரர்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ’ ரஷியாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டத்தற்கு பொறுப்பேற்க வேண்டியது சிரியா ராணுவம் தான்.

உயர்தொழில்நுட்ப ஏவுகணைகள் பொறுப்பற்றவர்களின் கைகளில் கிடைத்தால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே, ரஷியாவின் முடிவால் இந்த பிராந்தியம் அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ளது’. என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *