Home / FOREIGN NEWS / ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார்

இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வருகிற 4ம் தேதியன்று இந்தியா வருகிறார்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம், முதலீடு, ராணுவம், எரிசக்தி, விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது,

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் தாக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தீவிரவாத தடுப்பு, பல்வேறு பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் புதின் ஆலோசனை நடத்துகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவுக்கு நட்பு நாடாக விளங்கி வரும் ரஷ்யாவின் அதிபர் புதினின் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *