Home / SPORTS NEWS / ஷரினா வில்லியம்

ஷரினா வில்லியம்

 

Image result for serena williams history tamil news

 

சந்தேகமே இல்லை… 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனாதான். 14 வயதானபோதே புரஃபஷனல் டென்னிஸ் அரங்கினுள் நுழைந்தார். “தரவரிசையில் 200-வது ரேங்குக்கு மேல் இருக்கும் எந்த ஆணையும் எங்களால் வீழ்த்திட முடியும்” என்று தன் சகோதரி வீனஸோடு இணைந்து 16 வயதிலேயே சவால்விட்டவர் இவர். அன்று அந்த சவாலில் தோற்றிருந்தார். ஆனால், இந்த இருபது ஆண்டுகளில் பல ஆண் வீரர்களே வியக்கும் வகையில், 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்,

நான்கு ஒலிம்பிக் மெடல்கள் வென்று  காட்டியுள்ளார். இப்போது விளையாடிவரும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளவர் இவரே.

319 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா, நிறவெறியால் தாக்கப்பட்டவர், போதை மருந்து உட்கொள்ளாத போதும் மீடியாவால் சாடப்பட்டவர். இவை எதுவும் இவரை தடுக்கவில்லை. மனபலம்கொண்டு அனைத்தையும் தாண்டி இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றெடுத்தவர், அதன்பின்னும் கிராண்ட்ஸ்லாம் ஃபைனல் வரை முன்னேறி அசரடித்தார். செரீனாவின் உறுதிகண்டு மொத்த விளையாட்டு உலகமும் வியந்துகிடக்கிறது.

Related image

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *