Home / CINEMA NEWS / பொங்கலுக்குவர்றோம் சிம்பு

பொங்கலுக்குவர்றோம் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2.0, இந்தியன் 2 படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை தீர்ந்தாலே ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’  வெளியாகும் எனத் தயாரிப்பாளர் சங்கம் படக்குழுவினருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிம்பு ரசிகர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராகவும் மிரட்டல் விடும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *