Home / LOCAL NEWS / ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………

ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………

 

கடந்த நவம்பம் மாதம் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியல் அமைப்புக்கு முரணானது எனஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் 13 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட ஐவர் முழுமையான நீதியரசர்கள் குழாமை பெயரிடுமாறு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்ததுடன், இதன் பிரகாரம் பிரதம நீதியரசர் நலின் பெரேரா குறித்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தாம் உள்ளடங்கலாக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமை நியமித்தார். விடுக்கப்பட்ட வர்த்தமானியை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததுஎனினும், கடந்த 7 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்புஅறிவிக்கப்படும் வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிட்டது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *