Home / LOCAL NEWS (page 5)

LOCAL NEWS

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை அதிகாரிகள் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயகம ஹோகம எனும் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருகிறது இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் …

Read More »

மகிந்தராஐபக்சவிடம் பிரபாகரன் பணம் வாங்கியதற்க்கான ஆதாரம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்   மகிந்தராஐபக்சவிடம் பிரபாகரன் பணம் வாங்கியதற்க்கான ஆதாரம் டக்ளஸ்

Read More »

சற்று முன்னர் ஹட்டன் பிரதான வீதியில் வாகனம் குடைசாய்ந்து விபத்து

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்(Round) நானுஓயா டெஸ்போட் பகுதியில் வாகனம்(Van) ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு மாத்திரமே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள.

Read More »

பாண் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி

எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாணின் விலையை பழைய விலைக்கே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ஐந்து ரூபாவினால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 60 ரூபா பெறுமதியான பாண் ஒன்று மீண்டும் (55 ரூபா) விலைக்கே விற்பனை செய்யப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவுவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு வர்த்தகத்துறை அமைச்சர் ரஷாட் பத்தியுத்தீன் இணக்கம் தெரிவித்ததனால் இந்த தீர்மானம் …

Read More »

எரிபொருள் ​விலை அதிகரிக்கப்படும் அரசாங்கம்

டிசம்பர் மாதம் வரை நாட்டில் எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

சாவகச்சேரி விபத்தில் இளைஞன் பலி

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (19திகதி ) இரவு ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்தில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான நவநீதராசா வரதன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

Read More »

ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும்

இலங்கையில் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதனை 5 நிமிடங்களில் பெற்று கொள்ள முடியும். கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் இந்த விசேட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக விசேட இரண்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Read More »

பஸ்ஸின் சாரதியை தாக்கியதால் பணிப்பகிஷ்கரிப்பு

வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் அரச மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் மோதல் நடந்ததை அடுத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியை, தனியார் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் பஸ் உரிமையாளர் ஆகியோர் தாக்கியுள்ளனர். காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் …

Read More »

இலங்கையில் வறட்சியான காலநிலையினால் 7,15,616 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் வறட்சியால் 16 மாவட்டங்களிலுள்ள 2,12,737 குடும்பங்களைச் சேர்ந்த 7,15,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குடிநீர் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More »

மூன்று வருட காலப் பகுதிக்குள் 5000 முறைப்பாடுகள்

கடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »